உலக தொழிலாளர் தினத்தை ஒட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடி பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின விழாவில் மாவட்ட கழக செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிற்சங்க தலைவர் குமார் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்கால் பணிமனையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தின நிகழ்ச்சியில் கட்சியின் கொடியை மாவட்ட கழக செயலாளர் ஓம லிங்கமும் தொழிற்சங்க கொடியை மாவட்ட கழக அவைத் தலைவர் சாகுல் ஹமீது அவர்களும் ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர், இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க நாகை மண்டல பொருளாளர் நமச்சிவாயம், கிளைத் தலைவர் தேவாதிராஜன் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.