• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவி

Byvignesh.P

Jul 6, 2022

தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியின் தென்கரையில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பெரியகுளத்தின் கிராம கோவிலாக கருதப்படும் இத்திருக் கோவிலில் வருடம் தோறும் ஆனி மாதத்தில் ஆனிப் பெரும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவினை முன்னிட்டு கம்பம் நடுதல் மற்றும் சாட்டுதல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வினை முன்னிட்டு பெரியகுளம் வடகரையில் உள்ள பூசாரியின் வீட்டிலிருந்து கம்பம் முளைப்பாரிகள் ஊர்வலத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் அடைந்தது. பின்னர் கம்பத்திற்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் போன்ற அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்ற பின் கம்பம் நடுதல் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவிழா சாட்டுதழ் நடைபெற்றது. இந்த சாட்டுதலுக்கு பின்னர் வருகின்ற 11-ஆம் தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றுது.

அதனை தொடர்ந்து அன்றிலிருந்து சாமி சிம்ம வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வானங்கள் மூலம் திருவீதி உலா வரும். தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 19ஆம் தேதி புதன்கிழமை அன்று பக்தர்கள் தீச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். அதன் பின்னர் வருகின்ற 27 ஆம் தேதி மறுபூஜை விழாவினை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து திருவிழா நிறைவு வரும். கம்பம் நடுதல் மற்றும் சாட்டுதல் நிகழ்வினை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.