தமிழக அரசை கண்டித்து, காத்திருப்பு போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
1993-ல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு கால தாமதம் செய்யாமல் உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 1420 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட படி மே மாதம் 15 நாள் விடுமுறையை ஒரு மாதமாக வழங்க வேண்டும். உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அங்கேயே சமைத்து உண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.