மதுரையில் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அங்கன்வாடி மைய கட்டிடம். துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
3 ஆண்டு புதிய கட்டிடம் சிதிலமடைந்த காணப்படுவதால் பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 58., கோமசுபாளையத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் கடந்த 2020 – 2021 ஆம் ஆண்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதியான மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
சுமார் மூன்று வருடங்களை கடந்துள்ள நிலையில் தற்போது இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 30 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் கடுமையான சேதமுற்று பரிதாப நிலையில் காணப்படுகிறது.
குறிப்பாக அங்கன்வாடி மையத்தின் கைப்பிடி சேதமடைந்தும், தரை தளத்தில் இருக்கும் டைல்ஸ் கற்கள் உடைந்து குழந்தைகளுக்கு ரத்த காயங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மேலும் சில குழந்தைகள் RO தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பாதுகாப்பற்ற முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாக அங்கன்வாடி மைய ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், பெற்றோர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பற்ற சூழலில் உள்ள அங்கன்வாடி மையத்தை துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஏற்கனவே மதுரை முத்துப்பட்டி பகுதியில் கடந்த ஆண்டு அங்கன்வாடி மைய கட்டிடம் இருந்து விழுந்து இரண்டு குழந்தைகள் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது, அதே போல் மதுரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் எதிர்பாராதமாக மாடியில் இருந்து விழுந்து தலையில் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
