சென்னையில் நாளை நடைபெறும் ஒரே நாடு ஒரே தேர்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தனி விமான மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வர்சன் சென்டரில் தமிழக பாஜக சார்பாக நாளை நடைபெற இருக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தனி விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவருக்கு ஜனசேனா கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்கள் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.
தமிழக பாஜக சார்பாக தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன், அமர் பிரசாத் ரெட்டி, சூர்யா உட்பட பாஜக பிரமர்கள் வரவேற்பளித்து நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.