• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பணியில் கவனம் செலுத்தாத அமைச்சர்களுக்கு செக். அதிரடியில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்..

Byகாயத்ரி

Sep 10, 2022

ஆந்திர அமைச்சர்வை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது, அமைச்சர்கள் சிலர் தவறு செய்கிறார்கள். இன்னும் சில நாட்கள் வரை மட்டுமே நான் பொறுத்திருப்பேன், மாற்றம் இல்லை என்றால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும் தயங்கமாட்டேன். குறிப்பாக பணியில் கவனம் செலுத்தாத 4 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சரவை கூட்டத்தில் அரசின் மீதான விமர்சனங்களுக்கு நிச்சயம் பதில் அளிக்க வேண்டும். கட்சி, அரசு விவகாரங்களில் அமைச்சர்களின் பணிகள் குறித்து உளவுத்துறையிடம் விசாரிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்கூட்டியே கடுமையான முடிவுகளை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளிக்கு பிறகு ஆந்திர அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.