கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு,அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது..
கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமம்,கம்பம் நடுதலுடன் துவங்கியது.தொடர்ந்து ஒவ்வொரு நாளும், காலை, மாலை என கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளாக,மாவிளக்கு பூஜை,பொங்கல் பூஜைபளுடன் தீபாரதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.மேலும் கோவில் தர்மகர்த்தா டாக்டர் சிவராமன் தலைமை மற்றும் ஏற்பாட்டில் குடும்பத்தினர் சார்பாக நடைபெற்ற அம்மன் திருக்கல்யாண, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் கலந்துகொண்டார்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மணக்கோலத்தில், திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை அடுத்து விழாவிற்கு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் மற்றும் தட்டுடன் கூடிய புடவைகள்(SAREES) வழங்கப்பட்டது.
மாநகர் மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி தலைவர், ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சிவராமன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்,*
வட்டக் கழகச் செயலாளர்கள் சிவகுமார், பொன்ராஜ், மாநகர் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் தி.கண்ணன்,கழக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அமமுக பொது செயலாளர் TTV தினகரன் செய்தியாளர்களை சந்தித்த போது, வரும் சட்டமன்ற பொது தேர்தலில் தமிழகத்தை வாட்டி வதைக்கும் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நினைக்கும் அனைத்துக் கட்சிகளும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்.

எங்களது கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பலர் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில கட்சிகள் இணைவார்கள். கூட்டணியை பலப்படுத்துவது நல்ல நிகழ்வு என்றார். மேலும், தமிழகத்தில் 5000 ரூபாய்க்கு கூலிப்படையினர் கொலை செய்கின்றனர். 3 வயது சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாக்கப்பட்ட சூழ்நிலை நிலவி வருகிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மாணவர்களை குறி வைத்து போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டியவர்.
முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் அமைதி பூங்காவாக இருக்கலாம் தமிழக மக்கள் அவ்வாறாக இல்லை என்றார். அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தாய் மொழி தமிழில் படித்ததை ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். திமுக கூட்டணி உள்ளவர்கள் கொள்கைக்கான கூட்டணி அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை உள்ளன என்ற TTV தினகரன், கரூரில் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின் இன்று முதல்வர் ஆனதும் சிறந்த அமைச்சர் என கூறினார். உச்ச நீதிமன்றம் கூறும் வரை அமைச்சராக தொடர்ந்தார். முதல்வர் தனக்கு என்றால் ஒன்று பேசுவார், பிறருக்கு என்றால் வேறு பேசுவார்.
முதல்வர் ஸ்டாலின் நாள்தோறும் ஒன்று பேசுவார். அவர் ஆட்சியில் உள்ளதால் அவரது பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. என்றார். பாகிஸ்தான் இந்தியாவிற்கு பல ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. பாதுகாப்புக் கருதி இந்தியா எதிர் தாக்குதல் நடத்தும் சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தான் தள்ளியுள்ளது.
உச்சநீதிமன்றம் நடவடிக்கையின் படி நீட் தேர்வு நடைபெறுகிறது. ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை நீக்க முடியாது. அதற்கு பெரிய நடவடிக்கை வேண்டும் என்றவர்,
கிராமப்புற மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்த அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இறுதியாக திமுகவை வீழ்த்த வேண்டும் என மக்கள் வியூகம் அமைத்து வருகின்றனர். அதன் விளைவாகத்தான் எங்கள் கூட்டணி பலமாகி கொண்டு இருக்கிறது என TTV தினகரன் தெரிவித்தார்.