• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூர் அருகே வாலிபர்கள் மதுபோதையில் வெங்கடேசனை மயிலூற்று கோனேரி ஆற்றில் கை மற்றும் குச்சிகளால் தாக்கினர்.

ByT.Vasanthkumar

Jul 2, 2024

பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் அருகே உள்ள நாவலூரை சேர்ந்தவர் தர்மராஜன் (70), இவது மகன் வெங்கடேசன் (25). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை, அதே ஊரைச் சேர்ந்த 4 வாலிபர்கள் மதுபோதையில் வெங்கடேசனை கடந்த ஜூன்.20ம் தேதி லாடபுரம் செல்லும் வழியில் மயிலூற்று கோனேரி ஆற்றில் கை மற்றும் குச்சிகளால் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது குறித்து வெங்கடேசனின் தந்தை தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில், 504/24 U/S 294(b),323,324,331,506(ii) IPC வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், நாவலூரை சேர்ந்த ஜோதிவேல் மகன் முருகவேல் (27), மணிராஜ் மகன் ரஞ்சித் (30), கருணாகரன் மகன் அருண் (27), வேலாயுதம் மகன் நிகாஷ் (27) ஆகிய 4 வாலிபர்கள் மீது, வழக்குப் பதிவு செய்த போலீசார், முருகவேலை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.