சிவகங்கை அருகே உள்ள பாகனேரி அருள்மிகு புல்வநாயகி அம்மன் கோவில் ஆனித்திருவிழாவைகாசிமாதம் 31ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐந்தாம் நாள் மண்டகப்படியை முன்னிட்டு இரவு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் அம்மன் எழுந்தருளி தேரோடும் நான்கு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாளித்தார். திருவிழாவை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


