• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

‘கல்கி 2898 AD’ படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார்!

Byஜெ.துரை

Apr 22, 2024

நெமாவாரிலுள்ள ‘நர்மதா காட்’ எனுமிடத்தில் அஸ்வத்தாமா இன்றும் நடமாடுவதாக நம்பப்படுகிறது.

இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு ‘கல்கி 2898 AD’. ஒரு அற்புதமான புராணமும், அறிவியலும் கலந்த புனைவு கதை காவியமாக தயாராகி இருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் தருணத்தில், ‘கல்கி 2898 AD’ படத்தில் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் ஏற்றிருக்கும் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிடும் நிகழ்வு, மத்திய பிரதேச மாநிலத்தின் புனித நகரமான நெமாவார் தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமையப் பெற்றிருக்கும் வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது ரசிகர்களும், படக்குழுவினரும், கலந்து கொண்டனர்.

அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான இடமாக நெமாவாரை தேர்ந்தெடுத்தது.. இக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது. ஏனெனில் இன்றும் அஸ்வத்தாமா.. நெமாவார் மண்ணில் நடமாடுவதாக மக்களிடத்தில் நம்பிக்கை இருக்கிறது.

இதனிடையே அமிதாப்பச்சன் தனது கதாபாத்திரத்தின் ஒரு காட்சியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதுடன்,

”இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.‌ தரமான தயாரிப்பு.. நேர்த்தியான முறையில் செயல்படுத்தும் திட்டம்.. நவீன தொழில்நுட்பத்தின் வெளிப்பாடு மற்றும் அனைத்திற்கும் மேலாக இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாதது” என்றும் பகிர்ந்து கொண்டார்.