சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மகன் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அன்னதானம் வழங்கிய சின்னவர்.
சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராமு இளங்கோவனின் புதல்வன் முத்தமிழ் அரசு பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை திருப்பத்தூர் ரோட்டில் உள்ள பாலர்விடுதி குழந்தைகளுக்கு மற்றும் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

அதன் பின் அன்று இரவு முத்துப்பட்டி அருகே உள்ள மனவளர்ச்சி குன்றிய மாணவ, மாணவிகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. பசியாறு உணவு வழங்கிய முத்தமிழ் அரசுக்கு மனவளர்ச்சி குன்றிய மாணவ, மாணவிகள் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை செயலாளர்
ராமு இளங்கோவன், அழகர் பாண்டி ,புதுப்பட்டி செந்தில்குமார், தாமோதரன், கிருஷ்ணகுமார் மற்றும் கழக உடன்பிறப்புகள் , நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்து தெரிவித்தனர்.
