மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பாதிப்புகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன் பேட்டி :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மெய்ய நாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த திட்டங்கள் மற்றும் சிறப்பு தூர்வாரும் பணிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நிதிநிலை அறிக்கையில் மயிலாடுதுறை மாறுபட்டதில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டம் மற்றும் அதனை எவ்வளவு விரைவாக செய்ய முடியும் என ஆலோசனை செய்யப்பட்டது.
கலைஞரின் கனவு இல்லத் திட்டம் நீர்வளத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் ஊரக உள்ளாட்சிப் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் பள்ளிகளுக்கான கட்டுமான பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் 222 பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் 22 கோடியே 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன்.

ஜூன் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 9000 முகாம்கள் அமைத்து அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்க முதலமைச்சராக அறிவித்துள்ளார்கள். அதற்கான பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் முதல்வரின் திட்டங்கள் அனைத்தும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் அனைவரும் கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் குமாரமங்கலம் இடையிலான கதவனைத் திட்டம் சிறு சிறு பணிகளால் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அப்ப பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள் பணியிட மாற்றங்கள் மூலம் வேறு பணியிடங்களுக்கு சென்றுள்ளதால் உடனடியாக வேறு மருத்துவர்களை பணி நியமனம் செய்ய சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
விரைவில் கூடுதல் மருத்துவர்கள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். நேற்று பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளின் நஷ்டம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்றுத்தரும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 வாய்க்கால்கள் தூர்வாரும் பணி 70% நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் 15 தினங்களுக்குள் மீதமுள்ள பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும் என்றும் எங்காவது பனை மரங்கள் வெட்டப்பட்டது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.