• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

லியோவுக்கு போட்டியாக வில்லன் நடிகரை தேடும் ஏகே- 62 இயக்குநர்

அஜீத்குமார் கதாநாயகனாக நடிக்கவுள்ள 62 படத்திற்கான வேலைகள் வேகமெடுத்துள்ளன அதிகாரபூர்வமாக இயக்குநர் யார், படப்பிடிப்பு எப்போது என்பதை மட்டுமே அறிவிக்கவில்லை லைகா புரடெக்ஷன்ஸ்

ஆனால் எப்போது அறிவித்தாலும் உடனடியாக படப்பிடிப்புக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

கதாநாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திற்கான நடிகர் இருக்க வேண்டும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதி பவர்புல்லான வில்லன் நடிகர்கள் நடித்த படங்கள் எல்லாமே வெற்றிப்படங்களாகவே இருந்திருக்கிறது.எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா இவர்களில் யாராவது ஒருவர் எம்.ஜி.ஆர் நாயகனாக நடிக்கும் படங்களில் வில்லனாக நடித்திருக்கும் படங்கள் எல்லாமே வெற்றி பெற்றிருக்கும்.ரஜினிகாந்த் நாயகனாக நடித்த படங்களில் மறைந்த நடிகர் ரகுவரன் வில்லனாக நடித்தால் அந்தப்படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பதற்கு ஊர்காவலன், பாட்ஷா படங்களே மிக சிறந்த உதாரணங்கள்.நடிகர் விஜய் படங்களின் மிகப்பெரும்வெற்றிக்கு பிரகாஷ்ராஜ் வில்லன் நடிகராக இன்றளவும் தேவைப்படுகிறார்.அதே போன்றுதான் அஜீத்குமார் 62 படத்திற்கு அவருக்கு இணையான வில்லன் நடிகர் கிடைக்காமல் தடுமாறி வருகிறது.மற்ற நடிகர்களுக்கு எல்லாம் நிரந்தரமாக வில்லன் கதாபாத்திரத்திற்கு இவர் தான் என்று இருக்கும். ஆனால் அஜீத்குமார் படங்களில் அவருக்கு இணையான வில்லனாக அவரே நடித்திருப்பார் அதற்கு மிக சிறந்த உதாரணம் வாலி, மங்காத்தாவை கூறலாம்.அஜீத்குமாருக்கு Ak- 62 படத்தில் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆறு முதல் எட்டு கோடி ரூபாய் வரை கதாநாயகனாக நடிக்க சம்பளம் கேட்கும் அருண்விஜய் நடித்த யானை படம் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் வெற்றிபெறவில்லை

அறிவழகன் இயக்கத்தில்அருண்விஜய் நடித்துள்ள பார்டர் படம் வியாபாரம் ஆகாததால் வெளியீட்டு தேதிகள் பல முறை அறிவித்தும் இறுதி நேரத்தில்பைனான்ஸ் சிக்கலில் படம் ரீலீஸ் செய்ய முடியாமல் கடந்த ஒரு வருட காலமாக முடங்கிகிடக்கிறது.

இந்த சூழ்நிலையில் வில்லனாக நடித்தால் கதாநாயகனாக தொடர்வது சிரமம் என அவருக்கு கூறப்பட்டதால் அஜீத்குமார் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.இதனால் ஏகே- 62 படத்தில்ஆர்யாவை வில்லனாக நடிக்க வைக்க ஆலோசித்து வருவதாகவும், இருவரும் ஏற்கனவே 2014 இல் ‘மீகாமன்’ படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளதுடன், அஜீத்குமார் காம்பினேஷனில்ஆர்யா ஏற்கனவே நடித்திருப்பதால் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யா ஒப்புக்கொள்ளவில்லை என்றால் லியோ படம் போன்று மல்ட்டி ஸ்டார் வில்லன்களை களம் இறக்கலாமா என்கிற ஆலோசனையில் ஏகே-62 படக்குழு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.