அரியலூரில் அண்ணாசிலை அருகில் ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில்,தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தொழிலாளர் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் பங்கேற்று தொழிலாளர்களுக்கு பாதகமாக தமிழ்நாடு அரசு கையாளும் போக்கனை கண்டித்தும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தொழிலாளர் கொள்கையை தெளிவுபடுத்திட தமிழ்நாடு அரசு முன்வருவது முக்கியம் அவசியமாகும் என்பதை வலியுறுத்தி ஆர். தில்லைவனம் விரிவாகப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் ஜி ஆறுமுகம், அரியலூர் ஒன்றிய செயலாளர் து.பாண்டியன், ஏஐடியுசி துணைத் தலைவர் ஆர்.தனசிங் ஆகியோர் உரையாற்றினர்.


இந்நிகழ்ச்சியில் திருமானூர் ஒன்றிய செயலாளர் ஜி. மருதமுத்து, கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் டி.ஜீவா, செந்துறை ஒன்றியம் கே.சிவக்குமார், அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் ரெ. நல்லுசாமி, செ.மாரியப்பன், மா. கோபி,எமட்டாராணி, பா. காத்தவராயன், க. அஞ்சலை, த. பானுமதி, கே நாகூரான், வீ. உஷாராணி, ரா. ராணி,க.சுமதி, அருந்ததி, செ.கலா, வே.செல்வராணி, பெ. பெரியசாமி, ஜெயங்கொண்டம் நகராட்சி மா. தம்பிசிவம், எஸ் சீதா, பு. லெட்சுமி, அரியலூர் சிமெண்ட் ஆலை தார்ப்பாய் சீலர் பெ.பார்த்திபன், மற்றும் து.காசிநாதன், க. ராணி, செட்டிக்குழி பாலன், கோவிலூர் ரா. சின்னதுரை, அரியலூர் முருகேசன், கிராம ஊராட்சி ப. ரேவதி உட்பட திரளாக கலந்து கொண்டனர்.




