• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மழையால் சென்னையில் விமானச் சேவைகள் பாதிப்பு..!

Byவிஷா

Jul 13, 2023

சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமானச்சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் அண்ணாநகர் நுங்கம்பாக்கம், கே.கே. நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், மடிப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர், மாம்பலம், ஆழ்வார்பேட்டை, நந்தனம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.
மேலும் புறநகர்ப் பகுதிகளான குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. சென்னையில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 8 விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்து பறந்தன. இதே போன்று லண்டன், மலேசியா, சிங்கப்பூர், திருச்சியில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து, பின்னர் தரையிறங்கின. இதனால் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 12 விமானங்கள் 30 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. இவ்வாறு விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.