அரியலூர் ஒன்றியம், தாமரைக்குளம் மற்றும் வெங்கிட கிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களில்,அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியினை, அக் கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் இராஜேந்திரன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர்பவானி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை செயலா ளர்ஒபிசங்கர்,இணைச்செயலாளர் .நா.பிரேம்குமார்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செய லாளர் சிவசங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜீவா அரங்கநாதன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஓ வெங்கடாஜலபதி, அரியலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் செல்வராசு,அதிமுக நிர்வாகிகள் ஏபி ஜோதிவேல்,ஆதிகுடிக்காடு சங்கர், நகர அதிமுக செயலாளர் ஏ.பி செந்தில், அரியலுார் வடக்கு ஒன்றிய இணை செயலாளர் சுந்தரி,வடக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் திருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





