சென்னை அடுத்த பம்மல் தெற்கு பகுதிகழக அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, தெற்கு பகுதிகழக செயலாளரும், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவருமான அப்பு வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
திருநீர்மலை பிரதான சாலை, நாகல் கேணி பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து,
மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக, மாட்டு பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டியில் வலம் வந்து,
“பொங்கலோ… பொங்கல்…” என கோஷமிட்டு, பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார் அப்புவெங்கடேசன்.
இந்த நிகழ்ச்சியில், 10 வது வட்ட கழக செயலாளர் சரவணன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் கிஷோர்குமார், அனீஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு, எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு
மலர்தூவி மரியாதை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தெற்கு பகுதிகழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும்
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் நினைவுகளை போற்றி
நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.





