அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மகன் விஜய் விகாஷ் – தீக்ஷனா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (10.3.2025) கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக கழக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், கழக துணை செயலாளர்கள் LK சுதிஷ், ப.பார்த்தசாரதி, ExMla. விஜயபிரபாகரன், கு.நல்லத்தம்பி ExMla மாநில இளைஞர்அணி செயலாளர், மாவட்ட செயலாளர்கள் சிங்கை kசந்துரு, D.வனிதாதுரை, KS.சண்முகவடிவேல் மற்றும் மாநில துணை சட்ட ஆலோசகர் தொழிற்சங்க பேரவை மற்றும் தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.

மேலும் இத்தம்பதியினரின் திருமணம் கடந்த மார்ச் 3-ம் தேதி நடைபெற்றது. அதில் பா.ஜ.க நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ,பி,சி ஆகிய மூன்று ஹால்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சுமார் 65,000க்கும் மேற்பட்ட அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், ஆயிரக் கணக்கான வருகை புரிந்தனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சுமார் 30 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. வி.வி.ஐ.பி க்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் கொடிசியா வளாகம் எதிர்புறம் உள்ள மைதானத்திலும் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.