• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அதிமுகவில் இணைந்த அமமுக ஒன்றிய செயலாளர்

Byதரணி

Mar 14, 2023

வத்திராயிருப்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் அழகர்சாமி அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கே.டி .ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வத்திராயிருப்பு ஒன்றிய கழக செயலாளரும் வத்திராயிருப்பு முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான அழகர்சாமி, மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காந்திமதி முருகேசன், திமுகவைச் சேர்ந்த கனகராஜ் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், வத்திராயிருப்பு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு பேரூர் கழகச் செயலாளர் வைகுண்டமூர்த்தி, வத்திராயிருப்பு பேரூர் கழகப் பொருளாளர் கனகராஜ், வத்திராயிருப்பு முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் நெல்லையப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சக்திநடேசன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர் கருப்பசாமி, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் செல்லப்பாண்டியன் உடன் இருந்தனர்.