• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க., வேட்பாளர் பச்சை மால் என தலைமை உறுதியின் வெளிப்பாடு..,

குமரி மாவட்டத்தில் மார்ச் ஒன்றாம் நாள். அ.தி.மு.க. சார்பில் அம்மா பிறந்த நாள் கொண்டாட்டத்தை கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை பல பகுதிகளில் காணமுடிந்தது.

அ.தி.மு.க.,வினர் அம்மாவின் 78_ வது பிறந்த நாள் கொண்டாடங்களை காண முடிந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக. குமரியில் நான்கு தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக ஒரு தகவல் பரவும் நிலையில். இந்த செய்தியை உண்மையாக்குவது போல்.

கன்னியாகுமரியின் இப்போதைய சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் மீண்டும்
கன்னியாகுமரியில் போட்டியிடும் நிலையில். குளச்சல் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.டி.பச்சமால் போட்டியிடுவதற்கு கட்சியின் தலைமை
அனுமதி அளித்ததின் வெளிப்பாடாக குளச்சல் சட்டமன்ற பகுதியான திங்கள் சந்தை பகுதியில், அம்மாவின் 78_ வது பிறந்த தினம் கொண்டாட்டத்தை முதல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்.

தளவாய் சுந்தரம் முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் நாஞ்சில் வின்சென்ட், நசரேத்பஸிலியான் சந்துரு,சிவசெல்வராஜன், அசோக் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர் நாஞ்சில் வின்சென்ட் அம்மா மாணவர்களுக்கு
கல்வி ஆண்டின் தொடக்கத்திலே மடிக்கணினியை வழங்கினார்.

ஆனால் இன்றைய ஆட்சி. இந்த கல்வியாண்டு முடியும் நேரத்தில் மடிகணினியை வழங்கியுள்ளது மாணவர்கள் நலம் கருதியா.? தேர்தல் நெருங்குவதால் வாக்குகளை கவரும் ஒற்றை நோக்கமே என தெரிவித்தார்.

தளவாய் சுந்தரம் நடக்கவிருக்கும் தேர்தல் தமிழகத்திற்கு ஒரு திருப்புமுனை தேர்தல். இன்னும் இரண்டு மாதத்தில் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பார் என தெரிவித்தார்.

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கும் கே.டி. பச்சைமால்.10_ பெண்களுக்கு தையல் மிஷின், ஏனைய 500_க்கும் அதிகமான பெண்களுக்கு நலத்திட்ட உதவியாக புடவையை வழங்கினார்.