சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி சுனாமி பூங்கா நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.தாமரைதினேஷ், ஒன்றிய அவைத்தலைவர் பா.தம்பித்தங்கம், ஒன்றிய பொருளாளர் பி.தங்கவேல், கன்னியாகுமரி நகர செயலாளர் எஸ்.எழிலன், அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் என்.சிவபாலன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் குமாரவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கொட்டாரம் பாலன், மாவட்ட பிரதிநிதி எஸ்.பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.





