கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கழக பொதுச் செயலாளர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் மேலான உத்தரவுக்கிணங்க, கோடை காலத்தில் பொது மக்களின் தாகம் தீர்த்திடும் வகையில், கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கரூர், வெங்கமேடு பாலம் முன்பாக முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்டக் கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.



