விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதி கழகம் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவன தலைவருமான புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் ஏழைகளின் இதய தெய்வம் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு பூஜை செய்து ரக்ஷா வண்டி மூலம் .ஊர்வலமாக சென்று தென்காசி சாலை வழியாக ஜவஹர் மைதானம் அம்மா உணவகம் அருகில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவருவப்படத்திற்கு தெற்கு நகர கழகச் செயலாளர் எஸ் ஆர் பரமசிவம் வடக்கு நகர் கழகச் செயலாளர் வக்கீல் துறை முருகேசன் இவர்கள் தலைமையில் விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என் எம் கிருஷ்ணராஜ் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எஸ் என் பாபுராஜ் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் வடக்கு தெற்கு மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்கள் அழகாபுரியான் . ஆர் எம் குருசாமி .நவரத்தினம் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் மற்றும் ஏராளமான மகளிர் அணியினர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வடக்கு நகரச் செயலாளர் வழக்கறிஞர் முருகேசன் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை அருகே தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பும் அன்னதானம் வழங்கினார். இதே போல் அம்மா உணவகம் அருகே தெற்கு நகர செயலாளர் பரமசிவம் இனிப்புகளும் அன்னதானம் வழங்கினார் .

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என் எம் கிருஷ்ணராஜ் வருகின்ற 2026 ஆம் தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே டி ராஜேந்திர பாலாஜி அமைச்சராக வேண்டும். அதற்கு அவர்கள் யாரை வேட்பாளராக இராஜபாளையத்தில் நிறுத்துகின்றார்களோ அவர்களை வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமான சிறப்புரை ஆற்றினார்.





