• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..,

BySubeshchandrabose

Mar 27, 2026

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆ-லோகிராஜன் அறிவிக்கபட்டிருக்கிறார்.

ஆண்டிப்பட்டி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ள இவரை வேட்பாளராக அறிவித்ததை வரவேற்கும் விதமாக ஆண்டிப்பட்டி வைகை சாலை பிரிவில் உள்ள எம்ஜிஆர் சிலை பகுதியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என்றும் அதிமுக வேட்பாளர் ஆ-லோகிராஜன் வாழ்க என்றும் கோசம் எழுப்பியபடி அதிமுக கட்சி அலுவலகம் முதல் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக எம்ஜிஆர் சிலை வரை அதிமுக பாஜக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இணைந்து ஊர்வலம் சென்றனர்.