வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் (SIR) வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை அரசியல் கட்சி பூத் ஏஜெண்டுகளிடம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழுமையாக தேர்தல் அதிகாரிகள் தான் SIR பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி` அ.இ.அ.தி.மு.க சார்பாக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவை நேரில் சந்தித்து மனு வழங்கினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் மணிகண்டன், சீத்தாராமன், குருசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் லோகையாசாமி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




