உசிலம்பட்டியில் அதிமுக கழக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண் பாசறை சார்பாக தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வி.டி. நாராயணசாமி-க்கு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறுகின்ற சூழலில், அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் தவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி ஒன்றிய பகுதிகளான மாதரை கிராமத்தில் அதிமுக தேனி நாடாளுமன்ற வேட்பாளர் வி.டி.நாராயணசாமி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தி்ல் வாக்களிக்க கோரி, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், மாநில அம்மா பேரவை செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் அவர்களின் ஆலோசனைப்படி , மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் ஆலோசனைப்படி, உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உசிலம்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் பா.நீதிபதி வழிகாட்டின்படி, தேனி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் வி.டி. நாராயணசாமி-க்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு, உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உசிலம்பட்டி ஒன்றியம் நக்கலப்பட்டி ஊராட்சி பகுதிகளில் கழக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண் பாசறை மாநில துணைச் செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.,









