காங்கிரஸ் மாநில செயலாளர் மலேசியாபாண்டியன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் மலேசியா எஸ்.பாண்டியன். இவர் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில துணைத் தலைவராக உள்ளார். மேலும், கடந்த 2016-21-ல் முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தார்.
இவர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். திருப்பத் தூரில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வின்போது, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதிமுகவில் இணைந்த காங்கிரஸ் மாநில செயலாளர்
