மதுரை தியாகராஜர் டூலாப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பெண்மையை 2025 போற்றுவோம் என்ற தலைப்பில் கிராமப்புற பெண்களுக்கான ஏ ஐ தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி செயல்திட்டம் நடைபெற்றது .

நவீன ஏய் தொழில்நுட்பத்தை தென் மாவட்ட மக்களில் பயன்படுத்தி புதிய வகை செயலிகளை உருவாக்க கூகுள் நிறுவனம் மூலம் இந் முயற்சி மேற்கொள்ளப்பட்டது இதற்காக கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இயக்குனர் முரளி சம்பவம் வரவேற்புரை கூறினார் முதல்வர் செல்வலட்சுமி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் இணை பேராசிரியர் மஞ்சுளா , பெண்மை 20 25 பற்றி பெண்களிடம் விளக்கி கூறினார் சிறப்புரையாக காவலன் செயலி செந்தில் குமார் பெண்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் குறித்து குறித்து மேலும் தமிழக அரசின் சட்ட திட்டத்தின் கீழ் திட்ட தலைவர் சக்திவேல் கூகுள் நிறுவனத்தின் செயல் மேலாளர் அனுச் துகள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூகுளின் மூலம் பெண்மையை போற்றும் 2025 நிகழ்ச்சிக்காக சுமார் 200700 விண்ணப்பங்கள் திருச்சி கோவை திண்டுக்கல் விருதுநகர் சிவகங்கை மதுரை ராமநாதபுரம் கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் இருந்து வி ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தனர் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு நேற்று காலை கல்லூரியில் நடைபெற்ற பரிசீலனை விழாவில் 2055 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர் அதில் நிகழ்ச்சியில் பங்கேற்க 2025 பெண்கள் கலந்து கொண்டு google வல்லுநர்களின் ஆலோசனைப்படி புதிய ஏஐ செயலியை உருவாக்க பயிற்சி வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மாலை 6:00 மணிக்குள் மாணவிகள் தங்கள் புதிய முயற்சி திறமையின் மூலம் ஏய் தொழில்நுட்பம் செயலியை உருவாக்க வழிமுறைகளை கண்டறிந்தனர் இதன் மூலம் தென் தமிழகத்தில் முதல் முறையாக கிராமப்புற மாணவர்களும் ஏஐ செயலியை உருவாக்க முடியும் என்ற செயல் திட்டத்தை கூகுள் நிறுவனம் டி எஸ் எம் நிறுவனம் இணைந்து செயல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் இணை பேராசிரியர் சுபா நடராஜன் ஏ தொழில்நுட்ப வல்லுநர் சேவ் மாம் செந்தில் அவர்கள் கூறியதாவது:
இன்று பெண்மை 2025 என்ற நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. பெண்மை 2025 நிகழ்ச்சி என்னவென்றால் தியாகராஜா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், கூகுள் பார்ட் டெவலப்பர்ஸ் மற்றும் ஸ்டார்ட் அப் டி என் ஆகியோருடன் இணைந்து பெரிய அளவில் நடந்து கொண்டு இருக்கிறது.2025இல் 2025 பெண்மணிகளுக்காவது செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சி கொடுக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் எங்கள் மூன்று நிறுவனங்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். இது பெண்களுக்கு திறன் மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு என்பது தற்போது பேசும்பொருளக உள்ளது. பெரும்பான்மையாக சேர்க்கை நுண்ணறிவை பயன்படுத்தி அப்புகளை பெருநகரங்களில் மட்டுமே பயன்படுத்தி உருவாக்குவார்கள் என்று ஒரு எண்ணம் உள்ளது. ஆனால் நாங்கள் சிறு நகரங்களில் இருக்கும் கோடிங் தெரியாத பெண்களுக்கும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி அன்றாட சமூகத்தில் பயன்படுத்தக்கூடிய ஆப்புகளை உருவாக்க முடியும் என்கின்ற தன்னம்பிக்கையை கொடுப்பதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு 2500 மேற்பட்ட பதிவுகள் வந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி முதல் கன்னியாகுமரி வரை உள்ள கல்லூரிகளில் படிப்பும் மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இது முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே நடக்கக்கூடிய நிகழ்ச்சி. தென் தமிழகத்தில் இது போன்ற திறமைகளை பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சி.
2500 மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் கோடிங் தெரியாத பெண்களுக்கு இன்று மாலை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தங்களாலும் ஆப் உருவாக்க முடியும் என்கின்ற தன்னம்பிக்கை தருவதற்காக இன்று அவர்களுக்கு நேரடியாக பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
கூகுளில் இருந்து நேரடியாக வந்து பயிற்சியாளர்கள் இவர்களுக்கு பயிற்சி அளித்து கொண்டிருக்கிறார்கள். இன்று மாலை 5 மணிக்குள் குறைந்தபட்சம் 800 ஆப்புகளாவது உருவாக்கி பயன்பாட்டிற்கு விழ போகிறார்கள் என்ற நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
Al ஆப்புகள் உருவாக்குவதற்கு குறைந்தபட்சம் மாதங்களாகும் இல்லை வருடங்களாகவும் ஆனால் இன்று ஒரே நாளில் நூற்றுக்கும் ஏற்பட்ட ஆப்புகள் உருவாக்கப் போகிறோம் என்கின்ற உற்சாகத்தில் இருக்கிறோம்.
இந்த ஆப்புகளை உருவாக்கிய பிறகு ஒவ்வொரு பெண்மணிக்கும் ஒரு தனி தன்னம்பிக்கை வரும். தங்களாலும் ஒரு ஆப் உருவாக்க முடியும் என்பதை இந்த பெண்மை 2025 மூலமாக தன்னம்பிக்கை அவர்களுக்கு கொடுக்கிறோம் என டி எஸ் எம் இன்குபேஷன் இணை பேராசிரியர் சுபா நடராஜன் கூறினார் .
செந்தில்குமார் கூடியதாவது:
இதுபோன்று பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று நான் பத்து வருடங்களுக்கு முன்பே துவங்கின. கூகுள் அவர்களுடைய டெவலப்பர்களை பெரும்பான்மையின் பெருநகரங்களில் உபயோகித்துக் கொண்டிருந்தனர்.
2015இல் மதுரையிலும் இது போன்று உருவாக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அதன் அடிப்படையில் 1000கும் மேற்பட்ட பெண்களுக்கு வழிகாட்டி அவர்களை வைத்து மதுரை காவலன் என்கின்ற ஆப் உருவாக்கினும். அந்த ஆப் அப்போதும் உள்ள முதலமைச்சர் காவலன் என்ற ஆப் ஆக மாற்றி வெளியிட்டார் அதை 45 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் உபயோகித்து வருகின்றனர்.
இப்போது எல்லாம் செயற்கை நுண்ணறிவாக மாறிவிட்டது சேர்க்கை முன்னறிவு இல்லாத இடங்கள் இல்லை. தற்போதைய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது என்னவென்றால் 75% மேற்பட்டு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது ஆண்கள்தான் என்று தெரியவந்துள்ளது. பெண்களுக்கு செயற்கை நுண்ணறிவை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை.
டெக்னாலஜிகளை பெரும்பான்மையாக ஆண்களே உருவாக்குகிறார்கள் பெண்களின் பங்கு அதன் அதிகமாக இல்லை. மதுரை சுற்றி பல தொழில்கள் உள்ளது அதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும். இதற்காக சென்னையில் இருந்தோ இல்லை பெங்களூரில் இருந்து ஒரு தொழில்நுட்ப வல்லுநரை கொண்டு வந்து நீங்க வேலை செய்ய வைக்கும் அளவுக்கு நிதி நிலைமை இங்கில்லை.
இந்த பெண்கள் இதற்கு அப்புறமும் இங்குதான் இருக்க போகிறார்கள் அதனால் இவர்களை டெவலப்ஆர்கலாக மாற்றினால் இது சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்து அவர்களுடைய தொழில் வளர்ச்சி அடையும். தற்போது நாம் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம் எப்போது நாம் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்கிறோமோ அப்போதுதான் வளர்ச்சி அடைய முடியும். அதற்கு இந்த பெண்களின் ஒத்துழைப்பு தேவை.
இதில் கலந்து கொண்ட பெண்களை நான் ஏஐ மீனாட்சி என்றுதான் கூறுவேன். இவர்கள்தான் நாளை உலகத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பத்தை தர போகிறார்கள். இது இன்றுடன் முடியப்போவதில்லை அடுத்த ஆறு மாதங்கள் பெண்கள் தினம் வரை இவர்களுக்கு பயிற்சி அளிக்க போகிறோம்.
பயிற்சி மட்டும் அளிக்காமல் சுற்றியுள்ள கம்பெனிகளுடன் இணைந்து இவர்களுக்கு தொழில் வாய்ப்பாக ஏற்படுத்த போகிறோம். இது இந்த 2000 பெண்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஆர்வம் இருந்தால் நீங்கள் வந்து எங்களுடன் இணைந்து கொண்டு கற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு கோடிங் பற்றி எதுவும் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை செய்கை நுண்ணறிவு பயன்படுத்தி உங்களுக்கு நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம்.
எங்களுடைய பத்து வருட இந்த வளர்ச்சி பார்த்து மற்ற கம்பெனிகளும் எங்களுடன் இணைந்து பயணிக்கிறார்கள். எங்களுடைய குறிக்கோள் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஏஐ டெவலப்பர் பெண்ணை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய பிரச்சினை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்று காவலன் ஆப்” அறிமுகப்படுத்திய Al செந்தில்குமார் கூறினார்