விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நதிக்குடி கிராமத்தில் செங்குளம் கண்மாய் உள்ளது.முந்நூறு ஏக்கர் பாசன பரப்பு கொண்டதாகும். கண்மாய் நீரினை பயன்படுத்தி நதிக்குடி, திருவேங்கடபுரம், சுப்பிரமணியபுரம், ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் பாசனம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த தொடர் மழைக்கு வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வல்லம்பட்டி கண்மாய், வெம்பக்கோட்டை கண்மாய் , புளிப்பாறைப்பட்டி கீரி பாறைக்கண்மாய் முழுமையாக நிரம்பின. மற்றும் விஜய கரிசல்குளம் பாண்டியன் குளம் கண்மாய், சிப்பிப்பாறை கண்மாய், ஆகியவை நிரம்பும் தருவாயில் தண்ணீர் பெருகின. ஆனால் செங்குளம் கண்மாய்க்கு போதிய அளவு தண்ணீர் வராததால் விவசாய பணிகள் தாமதமாக தொடங்கி உள்ளன. அதுவும் குறைவான விவசாய நிலங்களில் மட்டுமே நெல் பாசனம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து விவசாயி மாரிமுத்து கூறியது செங்குளம் கண்மாய் நீரினை பயன்படுத்தி முழுவதும் நெல் பாசனம் மட்டுமே நடைபெறுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் காயல்குடி ஆற்றில் வரும் தண்ணீர் செங்குளம் கண்மாய்க்கு ஆறு வரத்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் வருகிறது. ஆனால் இந்தாண்டு அதிகளவு ஆக்கிரமிப்பு காரணமாக கண்மாய்களுக்கு தண்ணீர் வருவது குறைவதாக விவசாயிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தற்போது குறைவான தண்ணீரே வந்துள்ளதால் நெல் பாசனத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் 70% விவசாயிகள் இன்னும் விவசாய பணிகள் தொடங்காமல் அடுத்த மழைக்காக காத்திருக்கின்றனர். கிணற்று பாசனத்தின் மூலமே தற்போது விவசாய பணிகள் தொடங்கியுள்ளோம்.என கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)