விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவில் செல்லும் சாலையான முடங்கியார் சாலையில் சாய்பாபா கோயில் அருகே சாலை ஓரத்தில் விவசாயக் கழிவுகளான எள்ளு செடி கொட்டி வைத்து அதற்கு தீ வைத்து விட்டனர்.

அந்த தீ கொழுந்துவிட்டு எரிந்து அப்பகுதி வழியாக யாரும் செல்ல இயலாத அளவிற்கு புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் நடந்து செல்பவர்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்கின்றனர். தானாக எரிந்து ஒரு மணி நேரம் கழித்து அந்த தீ தானாக அணைந்து விட்டது. விவசாயக் கழிவுகளை ஒட்டுமொத்தமாக கொட்டி தீ வைப்பதற்கு பதிலாக, சிறிது சிறிதாக தரிசு நிலத்தில் போட்டு எரித்து யாருக்கும் தொந்தரவு இல்லாத நிலையில் தீ வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
