தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளை அதிமுக சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் நேரில் பார்வையிட்டார்.
சிவகங்கை அருகே பெரிய கோட்டை கிராமத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்குள்ள கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்து வெள்ளக்காடாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் முன்னூறு ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது.


இதனால் ஏக்கருக்கு முப்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்து காணப்படுவதுடன் அங்குள்ள கூட்டுறவு வங்கி,அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்க பள்ளியில் மழை நீர் குளம் போல் காட்சியளிக்கிறது . மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் நேரில் சென்று பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.

அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் அனைத்து வடிகால்களும் தூர்வாரப்பட்டது. தற்போதைய ஸ்டாலின் அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அத்திட்டத்தை கைவிட்டதன் விழைவு மழைநீர் செல்லும் வடிகால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதாலேயே மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்குவதாக குற்றஞ்சாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் ஸ்ரீ தர், செல்வமணி, கோபி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் குழந்தைசாமி உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
