

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பாக மதுரை மேற்கு வட்டாரப் பகுதிகளில் வேளாண்மை காப்பீட்டு திட்டம் பயிற்சி முகாம் நடைபெற்றது
பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை சார்பாக மதுரை மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு பயிர் மதிப்பீட்டாய்வு திட்டம் மற்றும் பிரதம மந்திரி வேளாண் காப்பீடு திட்டம் பற்றிய புத்தூட்ட பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் மதுரை மண்டல புள்ளி இயல் இணை இயக்குநர் திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமை வகித்தார்.மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் திரு. சுந்தர்ஆனந்த் அவர்கள் முன்னிலை உரை நிகழ்த்தினார். மேலும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு திரு.சுப்புராஜ் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.
இந்த பயிற்சி முகாமில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கு பயிர் மதிப்பீடு செய்தல் போன்ற ஆலேசனைகள் வழங்கப்பட்டன.

