• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இந்தியில் பெயர் மாற்றம் செய்து அறிமுகம் செய்து, ஒரு தலை பட்சமாக செயல்படுவது தொடர்கிறது – எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி…

ByKalamegam Viswanathan

Aug 13, 2023

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை திருநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:

பாராளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் ஏமாற்றமாக அமைந்தது. மணிப்பூர் பிரச்சனை பற்றி மூடி பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதுதான் இந்தியா கூட்டணியின் கோரிக்கையாக இருந்தது. பிரதமரைப் போல் பேசாமல் பாஜக கட்சித் தலைவராக பேசுகிறார் மோடி. ராகுல் காந்தியின் பேச்சை பாராளுமன்றத்தில் பதிவு விடாமல் கூச்சலிட்டது பாஜகவின் பாராளுமன்ற ஜனநாயகமாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அதிரஞ்சன் சவுத்ரியை சஸ்பெண்ட் செய்திருப்பது 75 ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் நடைபெறாதது. பாராளுமன்றம் தற்போது மன் கி பாத் மன்றமாக மாறிவிட்டது. இந்தியை திணிக்கின்ற வகையில் மூன்று சட்டங்களையும் இந்தியில் பெயர் மாற்றம் செய்து அறிமுகம் செய்து, மோடியும், அமித் ஷாவும் ஒரு தலை பட்சமாக செயல்படுவது தொடர்கிறது.

நீட் தேர்வு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் கூறியிருப்பது மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் குறித்து இபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு:

ஆளுநர் பேசியிருப்பது அகங்காரத்தில் உச்சம் இது கண்டிக்கத்தக்கது. பாஜக கட்சி தலைவரை போல பேசுகிற ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது. இபிஎஸ் கூறியிருப்பதைப் போல பாராளுமன்றம் நடந்தால் தான் பேச முடியும். நாங்குநேரியில் நடந்ததை கூட அருகில் இருப்பவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார். பாராளுமன்றம் நடக்கவில்லை என்பதை அவரிடம் யாராவது சொல்ல வேண்டும்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நிலை குறித்த கேள்வி:

தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறபோது கர்நாடகா அரசு கட்சி வேறுபாடு இல்லாமல் இந்த நிலை எடுப்பது நடந்து வருகிறது. டி.கே.சிவக்குமார் அமைச்சரான பிறகு தண்ணீர் இருந்தால் கொடுப்போம், இல்லை என்றால் கொடுக்க மாட்டோம் என்று கூறியிருப்பது தவறானது இதை கண்டிக்கிறோம். அங்கு யார் ஆச்சியாக இருந்தாலும் சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் தான் ஆட்சி பார்த்து பேசுகின்ற நிலையில் இருக்கிறோம். காங்கிரஸ் கட்சி காவிரி விவகாரத்தில் 100 சதவீதம் தமிழக அரசின் நிலைக்கு நிற்போம். முதல்வர் இதற்காக என்ன சொல்கிறார்களோ அதை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்வோம்.

மதுரை விருதுநகர் எம்பிக்கள் குறித்து அண்ணாமலை விமர்சனம் குறித்த கேள்விக்கு:

அண்ணாமலை மதுரை எய்ம்ஸ், கப்பலூர் டோல்கேட் மற்றும் மதுரை விமான நிலைய 24 மணி நேர சேவை குறித்து எதுவும் பேசவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும் எங்களிடம் சொல்வதைவிட பிரதமர் மற்றும் அவரது அமைச்சர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக எங்கள் தொகுதிக்கான கோரிக்கைகளை கேட்டுக் கொண்டு வருகின்றோம். எங்கள் தொகுதிக்கான பிரச்சனைகளை குறித்து பேசாத அlண்ணாமலை எங்களை கேள்வி கேட்பதற்கோ, குறை சொல்வதற்கோ அருகதை இல்லை.

மதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்த கேள்விக்கு:

அதற்கான நிலங்கள் ஒப்படைக்கப்பட்டது. ஆறு ஏக்கர் நீர்நிலை நிலம்மட்டும் மிஞ்சி உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. மற்ற வேலைகள் முடிவதற்குள்ள நிலங்கள் ஒப்படைக்கப்படும்.