கோவை மாவட்டத்திலிருந்து தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்திற்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான சிவசங்கர் சென்று கொண்டிருந்தபோது கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாயனூர் சுங்கச்சாவடி அருகில் அரசு பேருந்து அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் நிறுத்தாமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அவர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப நிறுத்திய ஓட்டுநர் மற்றும் நடத்தினர்களிடம் அறிவுரை வழங்கினார்.

அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் தரமற்ற உணவகங்களில் நிறுத்தி உணவருந்த செய்கிறார்கள் என புகார் வந்ததால் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இங்குதான் உணவருந்த பேருந்தை நிறுத்துகிறீர்களா என கேள்வி எழுப்பினார்
தொடர்ந்து நான் யாருனு தெரியுமா..? நான் அமைச்சர் நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இங்க நிறுத்த சொல்லி யார் சொன்னா..? இங்க விலை அதிகமா இருக்குனு கம்பளைண்ட் கொடுத்த யார் பதில் சொல்லுவா..? நானா அல்லது முதலமைச்சர் பதில் சொல்வாரா எனவும்,
இது குறித்த காணொளி தமிழக போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் சமூக வலைத்தளங்களில் தனது முகநூல் வெளியிட்டுள்ளார்.