• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவுகாரணமாக பிரபல அரசியல் தலைவரும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த நாஞ்சில் சம்பத். அற்புதமான,ஆற்றல் மிக்க பேச்சாளர். இன்று அதிகாலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்.நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவ மனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டர்.பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நினைவிழந்த நிலையில் மருத்துவ மனை கொண்டு வரப்பட்டதாகவும்.தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பது குறித்து உடனே எந்த தகவலும் வெளியாகவில்லை. உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என தெரிகிறது.