விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 16வது ஆண்டு ஆடிப்பூர கஞ்சி வாய்ப்பு ஊர்வலம் மற்றும் முளைப்பாரி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நிர்வாக குழு தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக பொருளாளர் அருள்பிரகாஷ் துணைத் தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிகாலையில் சக்தி கொடி ஏற்றி வைக்கப்பட்டு வேள்வி பூஜைகள் நடந்தன. ஆடிப்பூர கஞ்சி கலயம் ஊர்வலம் வழிபாட்டு மன்றத்திலிரு ந்து துவங்கப் பட்டு நகரின் முக்கிய வீதி வழியாக கொண்டு செல்லப் பட்டது. நேற்று மாலை முளைப்பாரி ஊர்வலம் நடை பெற்றது. விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.

