



தயாரிப்பாளரும், நடிகருமான விண்ஸ்டார் விஜய் தனது பிறந்த நாளை சென்னை ராமபுரத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,


நான் கடந்த 10 வருடமாக எனது பிறந்த நாளை, மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இல்லத்தில் கொண்டாடுவது எனது வழக்கம்.
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் மட்டுமில்லாமல் நீங்களும் உங்கள் பிறந்த நாளை இந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் உங்கள் பிறந்த நாளை கொண்டாடுங்கள்.
உலகமே என்னவென்று தெரியாமல் வாழும் இந்த குழந்தைகள் மத்தியில் நாம் ஒருநாள் அவர்களுடன் வாழ்ந்து பார்ப்பது ஒரு நல்ல விஷயமாக நான் உணர்கிறேன். இந்த குழந்தைகளுக்கு இன்னும் நான் நிறைய உதவிகள் செய்வேன் என்றும் கூறினார்.


