• Fri. May 3rd, 2024

நடிகர் விஜயகாந்த் மறைவு : அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் இரங்கல்

Byவிஷா

Dec 28, 2023

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி, அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவிதது வருகின்றனர்.
பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு வயது 71. முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தபோதே தனிக்கட்சி ஆரம்பித்து தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். திராவிட கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்தார்.
அவர் கடந்த சில ஆண்டுகளாக பொதுநிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்து வருகிறார். அவ்வப்போது பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நவம்பர் 18ம் தேதி நுரையீரலில் சளித்தொல்லை காரணமாக சென்னை ராமபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். டிசம்பர் 11ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு தேமுதிக செயற்குழு, பொதுகுழு கூட்டங்களிலும் கலந்து கொண்டார். அங்கு விஜயகாந்த்தை பார்த்த தொண்டர்கள் ஆனந்த கண்ணீர்விட்டனர்.
டிசம்பர் 26ம் தேதி நேற்று முன்தினம் மீண்டும் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது தேமுதிக தலைமை விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டதாக தேமுதிக கட்சி நிர்வாகம் அறிவித்தது. விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் இதனால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
விஜயகாந்த் மறைவை அடுத்து மியாட் மருத்துவமனை மற்றும் அவரது வீட்டிற்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஜயகாந்த் உயிரிழந்த செய்தியை அறிந்ததும் கட்சி தொண்டர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுத வண்ணம் உள்ளனர். விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *