• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தென்மாவட்ட மக்களை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!

Byவிஷா

Dec 30, 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலத்திட்;ட உதவிகளை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவை இந்த மாதம் சந்தித்தது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பின்னர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
மழை வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், பல்வேறு கட்டமைப்புகள் என அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் இறந்தன. இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி வருகிறது.
இதனிடையே, நடிகர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளையும், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்குமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால், நிவாரணம் உள்ளிட்ட பொருட்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு வழங்கினர்.
இந்த நிலையில், திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கவுள்ளார். அதன்படி, திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று நல திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கே.டி.சி நகரில் 1000 பேருக்கு நிவாரணப் பொருட்களை நடிகர் விஜய் வழங்க உள்ளார். இதற்காக நடிகர் விஜய், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமான மூலம் வந்து, அங்கிருந்து காரில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.