• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

10,12ம் வகுப்பில் அதிக மதிபெண் பெற்ற மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கபோகும் நடிகர் விஜய்

ByA.Tamilselvan

May 25, 2023

நடிகர் விஜய் சமீபத்தில்வெளியான 10,12ம் வகுப்பில் அதிக மதிபெண் பெற்ற மாணவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
டூ தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி நந்தினி என்பவர் சாதனை செய்துள்ள நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் உட்பட பலர் பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில் 10,12ம் வகுப்பில் அதிக மதிபெண் பெற்ற மாணவர்கள் 1500 பேரை நடிகர் விஜய் சந்திக்கவுள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி,அதே போல இறந்த தன் அப்பாஉடலை வீட்டில் இருந்த நிலையிலும் தேர்வெழுத்திய மாணவி கிரிஜாவையும் நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது