மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசவாமி திருக்கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பாக வேல் பூஜை மற்றும் கந்த சஷ்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் ரஞ்சித் வேல் பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித் கூறுகையில்:

பவுர்ணமி அன்று இன்று திருப்பரங்குன்றத்தில் வேல் பூஜை வழிபாடு செய்ய வந்திருக்கிறோம். கடந்த ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைய நிறைவேற்றப்பட்டது. அந்த மாநாட்டிற்கு உலகம் எங்கும் பல இடங்களில் இருந்து கலந்து கொண்டனர். இந்த தீர்மானங்களில் ஒன்றான அக்டோபர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் ஆயிரம் கோவில்களில் கோ பூஜை, கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை ஆகியவற்றை நடத்த வேண்டும் என்றும் எதற்காக இதை நடத்த வேண்டும் என்றால் தேசத்தின் ஒற்றுமை, மக்களின் நலன் மற்றும் சமுதாய ஒற்றுமைக்காக இந்த வழிபாடு செய்யப்படுகிறது. இதேபோல் அறுபடை வீடுகளிலும் செய்ய உள்ளோம் இதை தொடர்ந்து நான் திருச்செந்தூர் செல்ல உள்ளேன். மக்களுக்கு அறிவுறுத்த போவதில்லை ஆனால் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்திற்கு பிறகு திடீரென முருகன் குறித்து வழிபாடுகள் நடைபெறுவது குறித்த கேள்விக்கு:
புதிதாக டாஸ்மாக் கடைகளை திறந்தால் தான் கேள்வி வரவேண்டும். சாமிக்காக மக்களை வரவைப்பது அதை எடுத்துச் சொல்வது ஆரோக்கியமானது தான். முருகன் மாநாட்டிற்கு பிறகு வந்த இதுவரை செய்து கொண்டிருந்தோம் ஆனால் தற்போது ஊடகங்களால் அது வெளியே தெரிகிறது.
கரூர் சம்பவம் குறித்த கேள்விக்கு:
கையில் வேலை வைத்து அரசியல் பேசக்கூடாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் மனதார ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். தீராத வழி. அரசாங்கமோ, தனிமனிதரோ பொருளாதார ரீதியாக உதவலாமே தவிர இழந்த உயிரை திரும்பி வாங்க முடியாது. இது போன்ற நிகழ்வு இந்த கூட்டம் மட்டுமல்ல இனி எந்த நடிகரும் அல்லது அரசியல் கட்சித் தலைவர் பொதுக்கூட்டம் நடத்தினாலும் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்கான கட்டமைப்பு அல்லது சட்டத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
தலைமை பண்பு இல்லாதவர் என விஜய் நீதிபதி கூறியது குறித்த கேள்விக்கு:
நீதிபதி கருத்தை நாம் மதிக்க வேண்டும். தமிழக அரசு நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளது, மத்திய அரசும் குழு அமைத்துள்ளது. இது போன்ற நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவும் விஜய் ஆதரவாகவும் அல்லது விஜய்க்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்திற்காக ஆதரவாகவோ கருத்து சொல்வது சிறந்தது அல்ல எனக் நடிகர் ரஞ்சித் கூறினார்.