டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய மாநிலங்களவை உறுப்பினர் நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
பிரதமர், முதலமைச்சர்கள் பின்னணியுடன் சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வது குறித்து மசோதா குறித்து கேட்ட பொழுது, இப்பொழுது அதைப் பற்றி பேசக்கூடாது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் எத்தனை பேர் கையெழுத்து போட்டார்கள் என்பதெல்லாம் குறித்து இங்கு பேசக்கூடாது.
வயதாகி சினிமா மார்க்கெட் குறைந்த பிறகு நான் அரசியலுக்கு வரவில்லை படைபலத்துடன் தான் வந்திருக்கிறேன் என விஜய் பேசியது குறித்து கேட்ட போது,
என் பெயர் கூறியிருக்கிறாரா? இல்லை யாருடைய பெயராவது கூறி இருக்கிறாரா? அட்ரஸ் இல்லாத கடிதத்திற்கு நாம் பதில் போடலாமா எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.