• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

நடிகர் திலீபன் புகழேந்தியின் புது தமிழ் திரைப்படம்!

Byஜெ.துரை

Jun 24, 2024

தமிழ் திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது இயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசை உலகத்தின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து இன்றும் மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை வழங்கிய புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி என்பது அனைவரும் அறிந்ததே .

நடிகர் திலீபன் புகழேந்தி பள்ளிக்கூடம் போகாமலே,எவன் என்கிற இரு படங்களிலும் ஹீரோவாக நடித்தவர். இப்படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றன.சாகாவரம் என்கிற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து உள்ளார்.

இப்படம் முடியும் தருவாயில் உள்ளன.ஆண்டனி என்கிற திரைப்படமும் முடியும் தருவாயில் உள்ளது .இவற்றுக்கு இடையில் 5 ஹீரோயின்கள் நடிக்கும் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கிறார் .

புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.