• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சன் பிக்சர்ஸ்சை மூக்குடைத்த நடிகர் தனுஷ்

பிரபல தொலைக்காட்சியான சன் குழுமம் தொலைக்காட்சிகளில் முதன்மையானதாக இன்றுவரை இருந்து வருகிறது. இவர்கள் செய்யாத தொழில்கள் சினிமா தயாரிப்பதிலும் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். முன்பெல்லாம் இவர்கள் படங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி அதை வெளியிடுவார்கள்.முதன் முதலில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தை இவர்களே தயாரித்தார்கள். பின்னர் அதனை ஒரு தொழிலாக மாற்றினார்கள் இன்றுவரை படங்களை தயாரித்து வருகிறார்கள். இவர்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்கும் நடிகர்கள் இவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்ற கட்டளையின் படி இவர்கள் ஒப்பந்தம் செய்வார்கள்.
இவர்கள் சொல்வதைக் கேட்க முடியாது நீங்கள் சொல்லும் இடத்திற்கு வர முடியாது என்று சொன்ன முதல் ஆள் அஜித் குமார். அதன் பின்னர் யாரும் இவர்களை எதிர்க்கவில்லை இவர் சொல்வதை கேட்டு தலையாட்டிக் கொண்டே இருந்தார்கள் நடிகர்கள்.தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தயாரிக்கும் பொழுது வேண்டா வெறுப்பாக தயாரித்தார்கள். வெளியிட வேண்டும் என்ற கடமைக்கு வெளியிட்டனர். காரணம் தனுஷ் மீது நம்பிக்கை இல்லை படம் தோல்வியைத் தழுவும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். ஆனால் படம் வெற்றியடைந்து விட்டது.தற்போது தனுசை சன் டிவி புரமோஷனுக்கு பேட்டி எடுக்க அணுகினார்கள். ஆனால் தனுஷ் வர மறுத்துவிட்டார். இந்த படத்தின் புரமோஷன் தன் சொந்த செலவில் தனுஷ் செய்து கொண்டார்.
இப்பொழுது வெற்றி அடைந்த உடன் கூப்பிட்டால் உடனே வந்து உங்களுக்கு மணியாட்ட வேண்டுமா என்று கடும் கோபத்தில் கூறிவிட்டார். இது சன் டிவிக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தான் தனுஷ் உண்மையான ஹீரோ என்று ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர்.