• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சப் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் அதிரடி சோதனை..,

ByK Kaliraj

Mar 5, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கண்டியாபுரம், பனையடிப்பட்டி, வல்லம்பட்டி, அச்சங்குளம், அன்பின் நகரம், உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி, சப் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

பனையடிபட்டியில் உள்ள பட்டாசு ஆலை பின்புறம் உள்ள தகர செட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து உடனடியாக போலீசார் தகர செட்டை சோதனை நடத்தியதில் சட்ட விரோதமாக கருந்திரிகள் தயாரிக்கப்பட்டதும் சிலர் கருந்திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.போலீசாரை கண்டதும் அனைவரும் தப்பி ஓடினர். உடனடியாக போலீசார் சட்ட விரோதமாக தயார் செய்யப்பட்ட ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான கருந்திரிகள் 270 குரோஸ்களையும் கைப்பற்றினார்கள். தொடர்ந்து தப்பி ஓடிய சாத்தூர் கீழக்காந்தி நகரை சேர்ந்த மாரிமுத்துவை (32) கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான கோதை நாச்சியார் புரத்தைச் சேர்ந்த வினோத்குமார் (27) ,துரைசாமிபுரத்தைச் சேர்ந்த அசோக் (40 ) ,ஜெயபால் (50), ஜான் டேவிட்ராஜ் (27), துரைப்பாண்டி (44), முருகன் (52), ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.