பஞ்சப்பூர் பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஓட்டுநர்கள் இரு தரப்பினரிடைய இரவு மோதல் ஏற்பட்ட நிலையில் போலீசார் இரவு தடியடி நடத்திக் கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தடியடியின் போது கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களை விடுதலை செய்ய வேண்டும், என ஆட்டோ ஓட்டுநர்கள் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தை
மனித நேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் பயாஸ் அகமது தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

பின்னர் காவல் துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையால், முற்றுகை போரட்டம் முடிவுற்று , நேற்று இரவு ஆயுதம் கொண்டு தாக்கியவர்களை கைது செய்து விட்டதாகவும், மேலும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி கூறியதால் அனைவரும் போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்திய 4 பேரை புதூர் போலீசார் கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)