தென்காசி மாவட்டத்தில் செயல்படக்கூடிய சட்ட விரோத கல் குவாரிகளை ட்ரோன் சர்வே மூலமாக அளவீடு செய்து விதிமீறல்களில் ஈடுபட்ட கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. ஜமீன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று நீதியரசர் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் நீதியரசர் அருள்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

15 தினங்களுக்குள் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு.