• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை..,

BySeenu

May 15, 2025

ஜே.இ.இ.மற்றும் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12. ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் இந்திய அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாவட்ட அளவில் புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்திய அளவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனம் மாணவர்களின் எதிர்கால கனவுகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில்,இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிவான நிலையில், கோவை மண்டல ஸ்ரீசைதன்யா பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் தேசிய அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளனர்.

அதன் படி கோவை மண்டலத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு 497 மதிப்பெண்களும் பனிரெண்டாம் வகுப்பில் ,494 மதிப்பெண்களும் பெற்று மாவட்ட அளவில் முதல் இடங்களை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கான பாராட்டு விழா கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் இணைந்து கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஸ்ரீ சைதன்யா கல்வி இயக்கங்களின் இயக்குநர்கள் சீமா போபன்னா மற்றும் நாகேந்திரா ஆகியோர் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இது குறித்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கூறுகையில் பள்ளி ஆசிரியர்களின் வழி நடத்தலும்,கடின உழைப்புமே இந்த வெற்றிக்கான காரணம் என தெரிவித்தனர்.

மேலும் செல்போனில் மூழ்காமல்,சமூக வலைதளங்களில் கவனம் செலுத்துவதை விட பாடங்களில் கவனம் செலுத்தி படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் மாணவர்கள் கூறினர்.

குறிப்பாக இந்திய அளவில் இலட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய சி.பி.எஸ்.இ தேர்வில் கோவை மண்டல அளவில் 72 பேர் பல்வேறு பாடப்பிரிவுகளில் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று சாதனை புரிந்துள்ளது குறிப்பிடதக்கது.