டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் இரண்டாவது ஆசிய யோகாசனப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது, இதில் 20 நாடுகளைச் சார்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர், இதில் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், நான்கு மாணவிகள் என ஆறு பேர் கலந்து கொண்டனர்,

மேலும் இவர்கள் சப் ஜூனியர், சீனியர், சீனியர் ஏ, ஆகிய மூன்று பிரிவுகளில் கலந்து கொண்டனர், இதில் இந்திய அணி 70 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது, இந்தியா சார்பாக தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட ஆறு பெரும் தலா இரண்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளனர் போட்டியிலும் குழு பிரிவிலும் இவர்கள் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்,
இதை எடுத்து தங்க பதக்கங்களுடன் சென்னை திரும்பிய மாணவ மாணவிகளை பெற்றோர்கள் உறவினர்கள் பயிற்சியாளர்கள் பூங்கொத்து கொடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்,
இதையடுத்தி தமிழ்நாடு யோகா பயிற்சியாளர் யுவராஜ் கூறுகையில்,
தமிழ்நாடு அரசு மற்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பது போல யோகா போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகளையும் ஊக்குவிக்க வேண்டும் இதனால் அடுத்த ஆண்டு ஜப்பானில் ஆசியாளான யோகாசன ப் போட்டி நடைபெற உள்ளது அதிலும் வெற்றி பெற முடியும்
தங்கப்பதக்கம் வென்ற வைஷ்ணவி கூறுகையில்,
இரண்டாவது ஆசிய யோகாசன சேப்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு ஆசியாவை சேர்ந்த பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன, ஜப்பான் இலங்கை கொண்ட நாடுகள் நன்றாக விளையாடினார்கள், இந்தியா சார்பாக தமிழகத்தில் இருந்து தேர்வாகி சென்ற நாங்கள் ஆறு பேரும் இரண்டு இரண்டு தங்க பதக்கங்களை வென்று உள்ளோம், அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய யோகாசன சாம்பியன் போட்டியில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வோம்,