கோவையில் அரசு பேருந்தை முந்த முயன்று தனியார் பேருந்து, நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஓட்டுனரை தாக்கிய பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, ஒண்டிப்புதூரில் இருந்து வடவெள்ளி செல்லும் ஆர் எம் எஸ் என்ற தனியார் பேருந்து, அதிவேகமாக லாலி சாலையில் இருந்து வேளாண்மைக் கல்லூரி அருகே இரவு 7.55 மணி அளவில் வந்தது உள்ளது. முன்னால் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தை முந்த முயன்ற போது, சாலையில் சென்று கொண்டு இருந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது மோதி உள்ளது. இதனைத் தொடர்ந்தும் தனியார் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்க முற்பட்டு உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஒன்று சேர்ந்து பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து லாலி சாலையில் இருந்து மருதமலை செல்லும் சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தும், அவர்கள் வர தாமதமானதால் , பொதுமக்கள் மாற்று பேருந்தில் கிளம்பிச் சென்றனர். தனியார் பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதாகவும், பயணிகளுக்கு பாதுகாப்பில்லாமல் உயிர் பயத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.








